அரசு விழாவில் ரஜினி பற்றி விமர்சனம் – விஜய்க்கு எதிர்ப்பு

தமிழக பொதுப்பணித்துறையின் சார்பில்,கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே,சிறைத்துறைக்குச் சொந்தமான இடத்தில்,6.98 ஏக்கர் பரப்பளவில்,1 இலட்சத்து 98 ஆயிரம் சதுரடியில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் ரூ.301 கோடி மதிப்பில் ‘பெரியார் அறிவுலகம்’ எனப்படும் ‘பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்’ கட்டப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்,இதற்கான திட்டம் தீட்டப்பட்டு,பெரியார் அறிவுலகக் கட்டிடப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

பெரியார் அறிவுலகத்தின் திறப்பு விழா இன்று (அக்டோபர் 16,2026) நடைபெற்றது.முதல்வர் விஜய் கலந்து கொண்டு இம்மையத்தை திறந்து வைத்தார்.அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார். பின்னர், முடிவுற்ற திட்டப்பணிகளைப் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக அமைச்சர் சம்பத்,முடியாது, நடக்காது என மற்றவர்கள் எதைப் பார்த்து பயந்து பின் வாங்கினார்களோ, அதை தன் உழைப்பால், நம்பிக்கையால் சாத்தியமாக்கியவர் முதலமைச்சர் விஜய் என்று பேசினார்.

இந்தப் பேச்சு சர்ச்சையாகியிருக்கிறது.இந்தப்பேச்சு அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு பின்வாங்கிய ரஜினியை விமர்சிக்கும் வகையில் பேசப்பட்டதெனச் சொல்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படம் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றுவருகிறது.

அதுகுறித்து மக்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதால் அதைத்தாங்க முடியாமல் விஜய் இரசிகர்கள் அப்படத்துக்கும் ரஜினிக்கும் எதிராக சமூகவலைதளங்களில் பல்வேறு எதிர்கருத்துகளை நாகரிகமற்ற முறையில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.அதன் நீட்சியாகவே,அரசு விழாவில் ரஜினியை விமர்சித்து ஓர் அமைச்சரே பேசுகிறார்.இதை முதல்வர் விஜய் இரசிக்கிறார்.இது முற்றிலும் தவறானது என்று கடும் எதிர்ப்புக் கருத்துகள் பரவிவருகின்றன.

Leave a Response