கர்நாடகத்தில் காங்கிரசு தமிழகத்தில் அதிமுக – சமஉக்களை இழக்கிறதா?

இருநாட்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு வரு​வாய்த்​துறை அமைச்​சர்
செங்​கோட்​டையன்,மிக விரை​வில் அதி​முக​வில் இருந்து 15 பேர் வெளியே வர உள்​ளனர். அதி​முகவைச் சேர்ந்த நிர்​வாகி​கள் சிலர் கூட்​டம் கூட்டி பேசி வரு​கின்​ற​னர். இன்று பலரால் தேர்​தல் களத்​தில் நிற்​கக்​கூட முடிய​வில்லை என்​பதே நிஜம்.தேர்​தலில்‘நான் வரு​வேன், நீ வரு​வாய்’ என பேசி​ய​வர்​கள் எல்​லாம் இரண்​டு,மூன்​றாம்
இடத்​துக்குச் சென்​று​விட்​டனர் என்றார்.

அண்டைமாநிலமான கர்நாடகாவில் காங்கிரசு ஆட்சி நடந்துவருகிறது.அம்மாநில முதல்​வர் டி.கே.சிவகு​மார்
அண்​மை​யில் நடந்த அமைச்​சரவைக் கூட்​டத்​தில்​,அரசுக்​குக் கெட்ட பெயரை ஏற்படுத்த பாஜக​வினர் முயற்​சித்து வரு​கின்​றனர் எனக் குற்​றம்​சாட்​டி​னார்.

அதற்கு விடையளிக்கும் வகையில் பேசிய கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா,காங்​கிரசு அரசுக்கு
எதி​ராக எந்தச் சதி​யும் செய்யவேண்​டிய அவசி​யம் எங்​களுக்கு இல்​லை.தேர்​தலுக்கு முன்​பாக அக்​கட்சியை சேர்ந்த 25 எம்​எல்​ஏக்​கள் பாஜக​வில் சேரத் தயா​ராக இருக்கிறார்​கள் என்​றார்.

கர்நாடகத்தில் 25 காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் சேருவார்கள் என அம்மாநில பாஜக தலைவர் சொல்லுகிறார்.தமிழ்நாட்டில் 15 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் சேருவார்கள் என செங்கோட்டையன் கூறுகிறார்.

இதைத் தொடர்ந்து,கர்நாடகம் மட்டுமின்றி ஒன்றியம் முழுவதும்,தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி,பிறகட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கும் இழிசெயலை பாஜக செய்துவருகிறது.அந்த இழிசெயலை தமிழ்நாட்டில் தவெக செய்வதாக விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response