மீண்டும் அஜித்-நயன்தாரா கூட்டணி..!


அஜித்-சிவா கூட்டணி பிற்காலத்தில் ரஜினிகாந்த்-எஸ்.பி,முத்துராமன் கூட்டணி போல இன்னொரு சாதனைக்கு தயாராகி வருகிறதோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. பின்னே இயக்குனர் சிவா தொடர்ந்து அஜித்தை வைத்தே படங்களை இயக்கிவருவதை பார்த்தால் வேறு என்ன நினைக்க தோன்றும்..?

வீரம், வேதாளம், விவேகம், என கமர்ஷியல் வெற்றிப்படங்களை கொடுத்த சிவா-அஜித் கூட்டணி நான்காவது முறையாக ‘விசுவாசம்’ படத்திற்காக இணைந்துள்ளார். எப்போது அஜித்-சிவா கூட்டணியில் நான்காவது படமாக ‘விசுவாசம்’ படத்தை அறிவித்தார்களோ அப்போதிருந்தே கதாநாயகி யாராக இருக்கும் என சீட்டுப்போட்டு குலுக்கி பார்க்காத குறையாக ஆளாளுக்கு ஆருடம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதோ முடிவாக அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் அஜித்துடன் பில்லா படத்தில் இணைந்து நடித்த நயன்தாரா அதன்பின் அஜித்துடன் ஏகன், ஆரம்பம் படங்களிலும் இடம்பிடித்தார். இப்போது நான்காவது முறையாக ‘விசுவாசம்’ படத்திலும் அஜித்துடன் இணைந்துள்ளார்

Leave a Response