அன்புமணிக்கு அறுவை சிகிச்சை – இருவாரங்கள் ஓய்வு

பாட்டாளி மக்கள் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி இராமதாசின் வலது கால் மூட்டில் நேற்று சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்று வீடு திரும்பிய அவர், நலமுடன் உள்ளார்.

அடுத்த இரு வாரங்களுக்கு பிசியோதெரபி சிகிச்சையும் ஓய்வும் எடுத்தக்கொள்ளும்படி மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால்,இரண்டு வாரங்களுக்கு அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார்.

மதுராந்தகம்,தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு,தமிழக அமைச்சரவையில் பாமக சேரக்கூடும் என்கிற செய்திகள் உச்சத்தில் இருந்தன.

அதேநேரம்,பாஜகவைச் சேர்ந்த எல்.முருகன்,ஒன்றிய அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பு ஆகியனவற்றிலிருந்து விலகியது,அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த வேலுமணி,சண்முகம் ஆகியோர் சமாதானக் கொடி பறக்கவிட்டிருப்பது ஆகிய அரசியல் மாற்றங்கள் நடந்திருக்கும் இந்நேரத்தில் பாமக தலைவரும் இரண்டு வாரங்கள் ஓய்வில் இருப்பார் எனும் செய்தி வெளியாகியிருக்கிறது.

இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையன என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response