கொடிவீரன் – திரைப்பட விமர்சனம்

தங்கைக்காக எதையும் செய்யத் துணியும் அண்ணன், அண்ணனுக்காக எதையும் ஏற்கும் தங்கை என பாசமலர் கதை.
கதாநாயகன்,எதிர்நாயகன் ஆகிய இருவருமே தங்களது தங்கைகள் மீதான பாசத்தின் காரணமாகச் செய்யும் செயல்கள்தாம் படம்.

அண்ணன் சசிகுமார், தங்கை சனுஷா இன்னொரு பக்கம் அண்ணன் பசுபதி அவருடைய தங்கை மஹிமா. இவர்கள் தவிர பசுபதிக்கு தங்கைமுறையான பூர்ணா. சசிகுமாரின் தங்கை சனுஷாவைத் திருமணம் செய்யும் விதார்த் இவர்களைச் சுற்றித்தான் கதை.

சசிகுமார் வழக்கம் போல, சனுஷா ,பூர்ணா ஆகியோர் சிறப்பு. அதிலும் பூர்ணா, வேடத்துக்கு உரிய நியாயத்தைச் செய்திருக்கிறார்.பசுபதி படத்துக்குப் படம் ஏதாவது வித்தியாசம் காட்டினால் நல்லது.

பாலசரவணன், விதார்த் , மதயானைக் கூட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாறன், தீனா ஆகியோர் அவரவர்க்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்திருக்கின்றனர்.

கிராமத்து வாசத்தோடு பாசங்களைக் கொட்டி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலூர், நத்தம், சிவகங்கை ஆகிய ஊர்களைச் சுற்றியுள்ள பகுதிகள் கதைக்களமாக இருப்பதும் கதாபாத்திரங்களுக்கான பெயர்கள் மற்றும் ஒருசில குறியீடுகள் சாதி அடையாளத்தை நினைவுபடுத்துகிறது. முத்தையா அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன பின்னணி இசையும் நன்று. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு தனித்துவம் காட்டியிருக்கிறது. கிராமத்து வீடுகளையும், புழுதியையும் திரையில் காட்டியிருக்கிறார் கதிர்.

படத்தின் பெயரும் பாடல்களும் சென்னைக்கு வெளியே படத்துக்குப் பலமாக அமையும் என நம்பலாம்.

Leave a Response