உங்கள் வாயில் தமிழ் வரக்கூடாது – கன்னட நடிகருக்கு எதிர்ப்பு

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக புனித் ராஜ்குமாரிடம் பேசியிருந்தனர். அவரும் சம்மதித்து படப்பிடிப்புக்கு கிளம்பத் தயாராகிவிட்டார். அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த விஷயம் பற்றிக் கேள்விப்பட்ட சில கன்னடப் பிரமுகர்கள், கன்னட ரசிர்களைத் திரட்டி அவருடைய வீட்டு முன் ஆர்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.  

புனித் ராஜ்குமார் ஒரு கன்னட நடிகர், அவர் வாயால் தமிழ் மொழி பேசி அவர் தமிழ்ப் படத்தில் நடிக்கக் கூடாது என அவர்கள் ஆர்பாட்டத்தில் கோஷம் எழுப்பியுள்ளார்கள். எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து புனித் ராஜ்குமார் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடிக்கும் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். இதனால்தான், அவர் நடிக்கும் கதாபாத்திரத்தில் தற்போது சசிகுமார் நடிக்க உள்ளார்.

தமிழ்ப் படத்தில் நடிக்க எதிர்ப்பு வந்ததையடுத்து விலகிக் கொண்ட புனித் ராஜ்குமார் நடிக்கும் நேரடி கன்னடப் படம் ஒன்றை கௌதம் மேனன் இயக்க உள்ளார். கன்னட நடிகைகள் மட்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கலாம், நடிகர்கள் நடிக்கக் கூடாது என கன்னடப் பிரமுகர்கள் தடுத்திருக்கிறார்கள்.

இதனால், தமிழ்ப்படத்தில் நடிப்பதன் மூலம் தன்னுடைய சந்தை மதிப்பை உயர்த்திக்கொள்ளலாம் என்று நினைத்த புனித்ராஜ்குமாரின் எண்ணம் சிதைந்தது.

Leave a Response