ஆர்கேநகரில் நாம்தமிழர்கட்சிக்கு ஆதரவு – மு.களஞ்சியம் அறிவிப்பு

ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 145 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனையின் போது 73 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை நேரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று 14 சுயேட்சைகள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் இறுதி வேட்பாளர் பட்டியலில் 58 பேர் இடம் பெற்றுள்ளனர்.

திமுகவின் மருதுகணேஷ், அதிமுகவின் மதுசூதனன், டிடிவிதினகரன் ஆகியோரோடு நாம்தமிழர்கட்சியின் கலைக்கோட்டுதயம் களத்தில் உள்ளார்.

அவருக்கு,தமிழர் நலம் பேரியக்கம் தலைவர் மு.களஞ்சியம் ஆதரவு தெரிவித்துள்ளதோடு தமிழ் அமைப்புகள் எல்லாம் ஆதரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழர்களே வணக்கம்.

நடக்க இருக்கிற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோழர் செந்தமிழன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சியை தமிழ்த் தேசியக் கட்சிகள்,இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஆதரிக்க வேண்டும்.

இது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது.தமிழகத்தில்,தமிழ்த்தேசிய ஆற்றல்களுக்கு எதிராக

1.இந்துத்துவா அமைப்புகள்
2.திராவிடக் கட்சிகள்,திராவிட இயக்கங்கள் ஒருங்கிணைந்து நிற்கின்றன.
3.தலித்தியம் பேசுகிற இயக்கங்கள்,கட்சிகள்
4.போலியாக தமிழ்த்தேசியம் பேசுகிற திராவிடர்கள்
5.ஒற்றைச் சாதி அரசியல் பேசுகிற இயக்கங்கள்,கட்சிகள் போன்றவைகள் தமிழ்த் தேசியக் கருத்தியலை அடியோடு அழிக்க வேண்டும் என்று கூடி நிற்கிறார்கள்.

ஆகவே, தமிழ்த் தேசிய ஆற்றல்கள் ஒருங்கிணைந்து செயல்பட துணிய வேண்டும்.குறைந்த பட்ச நிபந்தனைகளோடு தேர்தல் களத்தில் துணிச்சலோடு நிற்கிற தமிழ்த் தேசியக் கட்சியை ஆதரிப்பதில் பிழை இல்லை.விரைவாக முடிவெடுத்தால் நல்லது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response