வீழ்ந்துவிடுவோம் என்று நினைத்தீரா இந்திய தூதரே?

கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழீழப்பகுதிகளில் பெருந்திரளான மக்களினால் உணர்வுப் பூர்வமாக நினைவு கூறப்பட்டது. இதையொட்டி தமிழ்மக்களின் மனுணர்வை வெளிப்படுத்தும் பல்வேறு பதிவுகள் எழுதப்படுகின்றன. அவற்றில் ஒன்று….

வீழ்ந்துவிடுவோம் என்று நினைத்தீரா இந்திய தூதரே?

திலீபன் நினைவஞ்சலி மூலம் யாழ் இந்திய தூதரின் முகத்தில் ஓங்கிக் குத்தியுள்ளனர் தமிழ் மக்கள்.

திலீபனைக் கொன்றுவிட்டு அகிம்சைதினம் கொண்டாட முயலும் இந்திய அரசின் முகத்தில் தமிழ் மக்கள் கரியைப் பூசியுள்ளனர்.
அகிம்சைதினம் என்ற பெயரில் தமிழகத்தில் இருந்து பேச்சாளர்களை இறக்குமதி செய்யும் யாழ் இந்திய தூதருக்கு தமிழ் மக்கள் நல்லதொரு பதிலை வழங்கியுள்ளனர்.

வடக்கு கிழக்கு முழுவுதும் 20 காந்தி சிலைகளை நிறுவி தமிழ் மக்களை ஏமாற்ற முயன்ற இந்திய தூதருக்கு தகுந்த பாடம் புகட்டப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறாக இம்முறை வடக்கு கிழக்கு எங்கும் திலீபன் நினைவு அஞ்சலி பெருந்திரளான மக்களினால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தில் மட்டுமன்றி தமிழகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் பரந்துவாழும் இடங்களில் திலீபன் நினைவு அஞ்சலி செய்யப்பட்டு வருகிறது.

இவ் நிகழ்வுகள் மூலம் தாங்கள் வீழ்ந்தவிடப் போவதில்லை என்பதை தமிழ் மக்கள் தெளிவாக காட்டியுள்ளார்கள்.

இது போர்த்துக்கேய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய இனம்
இது ஒல்லாந்து ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய இனம்
இது ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய இனம்
இது இலங்கை அரசுக்கு எதிராகப் போராடி வரும் இனம்
இது ஆக்கிரமிப்புக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை வரலாறாகக் கொண்ட இனம்

இந்த இனம் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டும் போராடாமல் அடிமையாக இருந்துவிடுமா இந்திய தூதரே?

– பாலன் தோழர்

Leave a Response