நயன்தாரா படத்தை பாராட்டிய சென்சார் அதிகாரிகள்..!


நயன்தாரா நடித்து தற்போது திரைக்கு வரவுள்ள படம் ‘அறம்’. இந்தப் படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. ‘அறம்‘ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடெக்ஷன்ஸ் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்தூள்ளது.

இந்த படத்திற்கு அனைவரும் எதிர்பார்த்தது போலவே சென்சார் அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி படத்தில் நயன்தாராவின் நடிப்பு உள்பட படத்தின் வசனங்கள் குறித்தும் சென்சார் அதிகாரிகள் படக்குழுவினர்களை பாராட்டியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்தப்படம் விஜய்யின் ‘மெர்சல்’ படத்திற்கு ஒருநாள் முன்னதாக அக்டோபர் 18ம் தேதி வெளியாகவுள்ளது.

Leave a Response