‘மாரி’ வில்லனுக்கு தனுஷ் செய்த ஸ்பெஷல் உதவி..!


பிரபல பாடகர் ஜேசுதாசின் மகன் விஜய் ஜேசுதாஸ். இவர் தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தில் வில்லனாக அறிமுகமானார். தற்போது இவர் ‘படைவீரன்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கி வருகிறார் இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் ‘படைவீரன்’ படத்தில் நடிகர் தனுஷ் பாடும் ஒரு பாடலை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா ஒலிப்பதிவு செய்தார். இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தனுஷ் நடித்த மாரி’ படத்தில் வில்லனாக நடித்த விஜய் ஜேசுதாஸுக்கு, அவர் ஹீரோவாக நடிக்கும் என்பதற்காக இந்த ஸ்பெஷல் உதவியை செய்துள்ளனர்.

Leave a Response