நடிகர் மன்சூர் அலிகானை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை பளிச்சென பேசிவிடுபவர். அதனால் சில நேரங்களில் நன்மையையும் சில நேரங்களில் சங்கடங்களும் விளைவதுண்டு.. அந்தவகையில்அவ்வப்போது தமிழக அரசியல் சூழ்நிலையையும், மக்களின் உணர்வுகளையும் தைரியமாக வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான்.
அதேபோல திரையுலகிலும் அவ்வப்போது அவர் வார்த்தைகளை சாட்டையாய் வீசுவதும் உண்டு. தற்போது அஜித்தின் விவேகம் படத்திற்கு கலவையான விமர்சனம் வந்து கொண்டிருக்கும் நிலையில், மன்சூர் அலிகான் நடிகர் அஜித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “தம்பி அஜித்துக்கு மன்சூர் அலிகானின் அன்பு வணக்கங்கள். தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படத்தையும் அயல் தொழில்கலைஞர்களை வைத்து எடுத்து விட்டீர்கள். தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழ்நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும். அதேபோல படம் ஓடவேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்புடுகிறீர். தமிழ்நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோவில்களுக்கு வந்திருக்கக்கூடாதா..? உரிமையுடன், நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான்’’ என கிண்டல் தொனிக்க குறிப்பிட்டுள்ளார் மன்சூர் அலிகான்.
அவர் சொல்வதும் நியாயம் தானே..?