இசையமைப்பாளர் தமனின் ஆசை நிறைவேறுமா..?


தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திப் படங்களுக்கு இசையமைத்து வருபவர் இசையமைப்பாளர் தமன். குறிப்பாக தெலுங்கில் உள்ள மகேஷ்பாபு, ஜூனியர் என்.தி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு யையமைத்து அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறிவிட்டார் தமன்.

ஆனாலும் இவருக்கு தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித் ஆகியோர் படங்களுக்கு இசையமைக்கவில்லையே என்கிற மனக்குறை நீண்டநாட்களாகவே இருந்து வருகிறது. குறிப்பாக அஜித்தின் படத்துக்கும் இசையமைக்கவேண்டும் என்றும் அதற்காக காத்திருக்கிறேன் என்றும் தனது ஆசையை வெளிப்படையாகவே கூறியுள்ளார் இசையமைப்பாளர் தமன்..

Leave a Response