இயக்குனர் சுசீந்திரனுக்கு உடன்பாடில்லாத விஷயம் இதுதான்..!


இயக்குனர் சுசீந்திரன் இயக்கம் படங்களில் பெரும்பாலும் விஷால், விஷ்ணு, இல்லாவிட்டால் விக்ராந்த் என்றுதான் ஹீரோக்கள் அமைகிறார்கள். ஏன் அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்கவில்லை என்றால் அதற்கு காரணம் சொல்கிறார் சுசீந்திரன்.

“சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அந்த கதை அவருக்குப் பிடிக்கவில்லை. விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். யோசிச்சு சொல்கிறேன் என்று சொல்லியிருக்கார். அஜித்திடம் கதை சொல்ல அனுமதி கேட்டிருக்கிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால்தான் இவர்களை வைத்து இன்னும் படம் எடுக்கவில்லை,” என்கிறார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் 2-ம் பாகம் உருவாக்கும் திட்டம் உள்ளதா என்று கேட்டதற்கு, “எந்த படத்தையும் இரண்டம் பாகம் எடுக்க எனக்கு உடன்பாடு இல்லை,” என்கிறார் சுசீந்திரன்..

Leave a Response