ஈரம் இயக்குனருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்..!


‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘100% காதல்’ ஆகிய படங்களில் தற்போது நடித்துவரும் ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக ஈரம்’ பட இயக்குனர் அறிவழகன் டைரக்சனில் நடிக்கவுள்ளாராம். ‘குற்றம் 23′ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் அறிவழகன்.

தற்போது இக்கதையில் தான் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தினை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க முன்வந்துள்ளார். தற்போது திரைக்கதையை இறுதிசெய்யும் பணியில் இருக்கிறார் இயக்குநர் அறிவழகன்.

Leave a Response