நயன்தாராவின் புதிய பெயர் ‘கோலமாவு கோகிலா’..!


நயன்தாரா தற்போது `அறம்’, `கொலையுதிர் காலம்’, `இமைக்கா நொடிகள்’, `வேலைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்தப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன. இந்நிலையில், அறிமுக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த படம் குறித்த அறிவிப்பு அடங்கிய வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த படத்திற்கு `கோகோ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது `கோலமாவு கோகிலா’ என்பதை சுருக்கி `கோகோ’ என்று வைத்துள்ளனர்.

காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

Leave a Response