விஜய்யை எதிர்க்கிறோமா..? ; சுசீந்திரன் விளக்கம்..!


சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, மெர்சலுடன் மோதுகிறார் இயக்குநர் சுசீந்திரன் என்கிற ரீதியில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுசீந்திரன், “எங்களுடைய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளோம். அதனால் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா எனக் கேட்கிறார்கள். மெர்சலை எதிர்த்து வரவில்லை; மெர்சலுடன் வருகிறோம்” என கூறியுள்ளார்.

மேலும், “இது ஒண்ணும் புதுசு இல்ல : இதேபோலத்தான் 2013 தீபாவளிக்கு அஜித் சாரின் ஆரம்பம் படத்தோடு சேர்ந்து ‘பாண்டிய நாடு’ படத்தை வெளியிட்டோம். இரண்டு படங்களும் வெற்றி பெற்றன” எனவும் கூறியுள்ளார் சுசீந்திரன்.

இயக்குநர் சுசீந்திரன் அடுத்து விஜய்யைக் கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார். இந்நிலையில், இப்படியான செய்திகள் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கவே, அவரே விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Response