பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் போராட்டம்


சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) ஊடகவியலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (26-08-2017) உண்ணாநிலை போராட்டத்தை நடத்தியது.
அதன்படி அரசு விளம்பரங்களில் 5 விழுக்காடு தொகையை பத்திரிகையாளர் நல நிதியத்துக்கு வழங்க வேண்டும்.
பிரஸ் அகாடமி அமைத்து அதன் பொறுப்பாளர்களாக பத்திரிகையாளர்களை நியமிக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்படும் வீடுகளை 3 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக உயர்த்த வேண்டும்.பத்திரிகையாளர்களுக்கு தனி வாடகை குடியிருப்புகளை உருவாக்க வேண்டும்.
பணியில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியை 2 இலட்சத்திலிருந்து 5 இலட்சமாக வழங்க வேண்டும்.
பணிப் பாதுகாப்பு மற்றும் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
மஜீத்தியா ஊதியக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல் படுத்த வேண்டும்.
வேஜ் போர்டு கொண்டு வர வேண்டும் போன்ற ஏராளமான கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
நெய்வேலி பாலு,வழக்கறிஞர் மனோகரன்,அ.குமரேசன்,இயக்குநர் கவுதமன்,இரா.சக்திவேல்,மோகன்,மணிமாறன்,சுந்தரபுத்தன்,ஆசிப் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டக் கோரிக்கைகளை அரசு ஏற்று நடைமுறைப் படுத்த கேட்டுக் கொண்டனர்.
நிறைவாக இயக்குநர் கவுதமன் பத்திரிகையாளர் அனைவருக்கும் குளிர்பானம் வழங்கி உண்ணாநிலையை முடித்து வைத்தார்.
பத்திரிகையாளர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு கலைந்தனர்.

Leave a Response