விவேகம் படத்தைப் பற்றி எதிர்மறையாகப் பேச இதுதான் காரணம்


ரெண்டு நாளா ஏதாச்சும் பாசிட்டிவ்வா படத்தை பத்தி சொல்லமாட்டாங்களானு ரொம்ப எதிர்பார்த்துட்டு இருந்தேன் … ஒன்னும் வரலை … இதுல ஒரு தீவிர அஜித் ரசிகர் படம் புடிக்கலைனு வேற சொல்லிட்டார் …

ஆனா படம் பாத்தப்புறம் தான் தெரியுது புடிக்கலை இல்லை புரியலை தான் அவருக்கான சரியான வார்த்தைன்னு…. அஜித் படம்னா விசில் அடிச்சி கத்தி ஆர்ப்பரிக்கும் படங்கள் தான் நாம் பார்த்திருப்போம் .. இங்க இந்த படம் ஒரு செகண்ட் மிஸ் பண்ணினா அந்த விநாடிக்கான கதை போயிடும்… இப்போ புரிஞ்சுதா ???
ஒவ்வொரு வினாடியும் கதைக்கும் படத்துக்கும் முக்கிய தருணமா இருக்கு .

உலகின் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவிருக்கும் ஒரு புளூட்டோனிய அணு ஆயுதத்தை தடுக்க, ஒரு நேர்மையான இன்டர்போல் அதிகாரி முயற்சிக்கையில் என்னென்ன தடைகளை எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது, அதையெல்லாம் தாண்டி அவர் எப்படி அதை செய்து முடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை…

ஒன் மேன் ஆர்மி’யைப் போல தனியாளாக மொத்த படத்தையும் தூக்கித் திரிகிறார்.அஜித்.’வரேன்ம்மா’ என யாழினியிடம் போனில் அலறுவது, ‘சுகர் இருக்கா’ என வில்லனை அடித்துக்கொண்டே ஸ்டைலாக கேட்பது, ஆர்யனுடனான தொலைபேசி உரையாடல் காட்சி, ‘பயத்திற்கு பாஷை தேவையில்ல’ போன்ற வசனங்களை உச்சிரிக்கையில்…. அடடா அடடா அடடடடா தான் …

காட்சிக்கு காட்சி வியக்க வைக்குப்படி நடித்திருக்கிறார். படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல் அஜித் பேசும் வசனங்கள் அனைத்தும் செம மாஸ்

வெற்றி, தோல்வி குறித்து அஜித் பேசும் வசனங்கள் உட்பட படத்தில் வரும் வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. எதிரிக்கும் துரோகிக்கும் வசனம் எல்லாம் ரசிக்கும் படி உள்ளது …

‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லாச் சூழ்நிலையிலும், நீ தோத்துட்டத் தோத்துட்டன்னு, உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கிற வரை எவனாலும் எங்கயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. Never ever give up’ இது உடலை சிலிர்க்கவைக்கும் வசனம்

அதேபோல் “கடவுள் பரிணாம வளர்ச்சி அடைந்து பணமாக மாறிட்டார்” என விவேக் ஓப்ராயின் வசனம் கூட வியக்க தான் வைக்கிறது

அஜித்துக்கும், காஜல் அகர்வாலுக்கும் இடையே நடக்கும் மோர்ஸ் சங்கேத மொழி (Morse code) தொடர்பை, இயக்குநர் சிவா படத்தில் பயன்படுத்திய விதம் ரசிக்கும்படி இருந்தது.

லாஜிக்ன்னா கிலோ எவ்ளோ’ என கேட்கும் வகையிலான பல காட்சிகள் படத்தில் உண்டு. கைத்துப்பாக்கியால் ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்துவது முதல் உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் தேடும் குற்றவாளியான ஒருவன் எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு தனியாளாக ஜெயித்துக்கொண்டே இருப்பது கொஞ்சம் நெருடலான விஷயமா தான் இருக்கு

ஒரு ஹேக்கராக அக்‌ஷரா ஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். சுமார் பத்து நிமிடம் வந்தாலும் கடைசி பார்வையில் நம்மை கொள்ளை அடித்த்து கொண்டு போய்விட்டார் அக்ஷரானு தான் சொல்லணும் …

படம் புரிஞ்சி பாருங்க … பிடிக்கும் ….

– பிரியாகுருநாதன்

2 Comments

Leave a Response