விஜய் கட்சி வேட்பாளர் மீது பகீர் புகார் – விவரம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் உண்மையான முகத்தை மக்களுக்குக் காட்டும் வகையில் அவர்களின் குடும்பத்தினர் தொடர்ச்சியாக தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

குறிப்பாக,ஆதவ் அர்ஜுனா குறித்து அவரின் மைத்துனர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.அதேபோல், தவெகவின் பொருளாளரும் மயிலாப்பூர் வேட்பாளருமான வெங்கடரமணன் மீது அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதேபோல், திருவள்ளூர் தவெக வேட்பாளர் அருண்குமார் மீது நடிகை சாந்தினி சட்டவிரோதக் கருக்கலைப்பு செய்தார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில்,தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரிய வில்சனின் சகோதரர் மரிய கிளாட் நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது….

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரிய வில்சனைப் பற்றிய உண்மைகளை அந்தத் தொகுதி மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.அவர் பரப்புரையில் உண்மையைச் சொல்வதில்லை;தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்.அவர் ஜேப்பியார் தொழில்நுட்பக் கழகத்தின் தலைவராக தன்னைக் காட்டிக் கொள்கிறார்.

ஆனால்,அந்தக் கல்லூரி அறக்கட்டளையின் கீழ்தான் செயல்படுகிறது.அந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக நானும் எனது சகோதரர் மரியவில்சனும் உள்ளோம்.ஆனால்,என்னுடைய ஒப்புதல் இல்லாமல் அவரின் தனிப்பட்ட தேவைக்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.ஆனால்,அதை திரும்பச் செலுத்தாததால் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.இதுதொடர்பாக நான் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை.அதனால்,நான் அறக்கட்டளையில் இருந்து அவரை நீக்கவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்.அதனால்,எங்களது வீட்டில் வந்து தாக்குதல் நடத்தினார்.அவரின் ஆட்கள் மூலம் என்மீது பொய்யான வழக்குகள் தொடர்ந்து, சட்டப்பூர்வமாக நான் தத்தெடுத்த எனது மகளை அவர் அழைத்துச் சென்றுவிட்டார்.

இப்போது,வழக்கைத் திரும்பப் பெறுங்கள்,அறக்கட்டளையில் இருந்து விலகினால் குழந்தையைக் கொடுக்கிறேன் என மிரட்டுகிறார்.இதுதொடர்பாக,காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனது மகளின் பெயரையும் மாற்றிவிட்டார்.இப்போது அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட கல்லூரியின் பெயரில் ரூ.50 கோடி கடன் பெற்றுள்ளார்.விஜய் அந்தக் கல்லூரியில் கலந்துகொண்ட நிகழ்ச்சியினை அங்கு நடத்தக்கூடாது என புகார் அளித்தேன்.அவர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுக்கிறார்.ஆனால்,ஜேப்பியார் கல்லூரியில் நடைபெற்ற கட்டுமானப் பணியின்போது கட்டுமானம் சரிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்தனர்.ஆனால்,அவர்களின் குடும்பங்களுக்கு எந்தவித இழப்பீட்டுத் தொகையும் கொடுக்கவில்லை.10 பேரின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response