ரஜினி பட விநியோக உரிமையைப் பெற பா.ம.க தலைவர் முயற்சி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற பலர் போட்டியிடுகிறார்களாம்.

சன்பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையைப் பெற முயன்றதாம்.தர்பார் தமிழக உரிமைக்காக லைகா நிறுவனம் சுமார் எழுபது கோடி அல்லது அதற்கு மேல் வேண்டும் என்று கேட்கிறதாம்.ஆனால் எல்லா விநியோகஸ்தர்களும் அறுபது கோடிக்குள்ளேயே இருக்கிறார்களாம்.

அதற்குக் காரணம்,சன்பிக்சர்ஸ் தயாரித்த ரஜினியின் பேட்ட படத்தின் தமிழக வசூலில் தயாரிப்பாளரின் பங்கு சுமார் 52 கோடி என்று சொல்லப்படுகிறது என்பதால் விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்களாம்.

இதனால் வியாபாரம் முடியாமல் இழுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.

இந்நிலையில் வழக்கமான விநியோக நிறுவனங்களைத் தாண்டி அரசியல்கட்சித் தலைவர்கள் சிலர் இப்படத்தின் உரிமையைப் பெற முயல்வதாகச் சொல்லப்படுகிறது.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் பின்புலத்தில் பாலாஜி என்பவர் இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையைப் பெற விரும்பி பட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் நெருங்கிய உறவினர் பிரகாஷ் என்பவரும் தர்பார் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையைப் பெறப் போட்டியிடுகிறாராம்.

தர்பார் தமிழக உரிமைக்காக லைகா நிறுவனம் சுமார் எழுபது கோடி அல்லது அதற்கு மேல் வேண்டும் என்று கேட்கிறதாம்.ஆனால் எல்லா விநியோகஸ்தர்களும் அறுபது கோடிக்குள்ளேயே இருக்கிறார்களாம்.இதனால் வியாபாரம் முடியாமல் இழுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.

Leave a Response