தொகுதிப் பங்கீடு – பாஜக மகிழ்ச்சி அதிமுக வருத்தம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக,பாஜக,பாமக (அன்புமணி), அமமுக, தமாக உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இந்நிலையில்,சென்னை இராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு, மார்ச் 23 அன்று கையெழுத்தானது.

பாஜக சார்பில் பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்த பாமக தலைவர் அன்புமணி அதிமுக அலுவலகம் வந்தார். நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கிட்டு உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தானது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளனர். பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். பாமகவுக்கு ஏற்கனவே மாநிலங்களவையில் ஓர் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் சட்டமன்றத் தேர்தலில் 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 27 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 18 தொகுதிகள் ஒதுக்கீடு. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுகவுக்கு மொத்தமாக 56 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளார்.

கடந்த தேர்தலைவிட ஏழு தொகுதிகள் அதிகமாகப் பெற்றுள்ளதால் பாஜகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அவர்களுக்கு ஏழு தொகுதிகள் கூடுதலாகக் கொடுத்துள்ளதால் அதிமுகவினர் வருத்தம் அடைந்திருக்கின்றனர்.

Leave a Response