‘குற்றம்-23’ டீமுக்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு..!


சமீபத்தில் வெளியான ‘குற்றம்-23’ படம் ரசிகர்களிடம் பெருவாரியான வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப்படம், எந்த ஒரு இடத்திலும் ரசிகனை சுனங்கவிடாமல் இறுதிவரை இருக்கை நுனியிலேயே அமர்ந்து படம் பார்க்க வைத்தது.

இந்தப்படத்தின் மூலம் ஹீரோவாக அருண்விஜய்யும் இயக்குனர் அறிவழகனும் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார்கள்.. இந்தப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் இந்தபடக்குழுவினரின் முழு உழைப்பையும் அருண்விஜய்யின் நடிப்பையும் பாராட்டியுள்ளார். அறிவழகன் ஷங்கரின் சீடர் என்பதும், அவர் தயாரித்த ‘ஈரம்’ படம் மூலமாகத்தான் அறிவழகன் திரையுலகில் காலடி எடுத்துவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response