வடிவேலுவுக்கு கிடுக்கிப்பிடி போடும் நடிகர் சங்கம்..!


நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார். சமீபகாலமாக இவரது படங்கள் குறைந்துவிட்டதால் தற்போது கதாநாயகனாக ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் நடிகர் வடிவேலு நடிப்பதாக இருத்து பின் நிறைய பிரச்சனைகளால் தன்னால் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

இதை தொடர்ந்து தற்போது வடிவேலு ஒரு மிகப் பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார். காரணம் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கர், வடிவேலு குறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது நடிகர் சங்கம், ஒன்று அந்த படத்தை நடித்து கொடுக்க வேண்டும் அல்லது தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று வடிவேலுவிடம் கூறியுள்ளனர்.

Leave a Response