2ஓ படத்தின் காட்சிகளைத் திருட முடிகிறது. நம் நிலை என்ன?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2ஓ படத்தின் முன்னோட்டக்காட்சிகள் மார்ச் 4 ஆம் தேதி, திருட்டுத்தனமாக இணையங்களில் வெளியானது.

சுமார் 450 கோடி செலவில் உருவாகும் மிகப்பெரிய படம் 2ஓ. அதன் படப்பிடிப்புத்தளங்கள் இராணுவமுகாம்கள் போல் பாதுகாக்கப்பட்டன.

அதேபோல் படத்தின் தொழில்நுட்ப வேலைகள் நடக்கிற இடங்களிலும் கடுமையான பாதுகாப்புகள்.

இவ்வளவு பாதுகாப்பாக இருந்தும், ஒருநிமிடம் இருபத்தேழு விநாடிகள் ஓடுகிற படத்தின் காட்சிகளே வெளியாகிவிட்டன.

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி வேதனை அடைந்திருக்கின்றனர். திரைப்படத்தொழிலில் இருக்கும் எல்லோருக்கும் இந்த அதிர்ச்சி உள்ளது.

நவீனகாலத்தில் எல்லாமே டிஜிட்டல் மயம். நம்து வங்கிக்கணக்குகள் உட்பட எல்லாமே டிஜிட்டலாக இருக்கிறது.

பாதுகாப்புக்காகவே பெரும் தொகை செலவு செய்த 2ஓ படத்தின் காட்சிகளையே திருட முடியுமென்றால் நம்முடைய விவரங்களின் கதி என்ன? நினைத்தாலே பயமாக இருக்கிறது.

Leave a Response