அமைச்சர் இராஜேந்திரபாலாஜியின் மலிவான விளம்பர அரசியல்


11.03.2017 அன்று சிவகாசி அருகே வெற்றிலையூரணியில் நாகமல்லி பட்டாசுத்தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 மாத கர்பிணி பெண் உள்ளிட்ட 3 பெண்கள் உட்பட 5 பேர் பலியாயினர்,

சம்பவம் நடந்த உடன் ஆதித்தமிழர் பேரவை, விடுதலைச்சிறுத்தைகள், சிபிஎம், உள்ளிட்ட முற்போக்கு இயக்க தலைவர்கள் ஆலை நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விபத்தில் இறந்த நபர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆலை நிர்வாகத்தின் தரப்பில் 5,50,000.00 மொத்தம் 27,50,000.00 தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டு, அப்பொழுதே வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் வருவாய்துறைக்கு ஒரு போன், உடனே இழப்பீடு இங்கு வழங்க முடியாது, மருத்துவமனையில் வந்து வாங்கி கொள்ளுங்கள் என கிளம்பி விட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களும், போராடிய தலைவர்களும், குழப்பத்துடன் காரணம் புரியாமல் மருத்துவமனை வந்தனர்.

1.30 மணி நேர காத்திருப்புக்கு பிறகு மந்திரி கேடி ராஜேந்திரபாலாஜி வந்தார். ஆலை நிர்வாகம் ஏற்கனவே மக்களுக்கு வழங்கிய கவரை வாங்கி மக்களுக்கு
தானே வாரி வழங்குவதைப்போல
வழங்கி்(?) ஜெயா டிவியில் ஒளிபரப்பு செய்ய குறும்படம் எடுக்க பட்டது, முடிந்தது.

மறுநாள் பத்திரிக்கை பார்த்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு
கேடி. ராஜேந்திரபாலாஜி 27,50,000.00
நிதி உதவி வழங்கினார் என வந்துள்ளது,

செய்தியை பார்த்தவர்களுக்கு மிக அதிர்ச்சி பணம் கொடுத்த முதலாளி பெயர் வரவில்லை, போராடிய தலைவர்கள் பெயர் வரவில்லை, சூட்டிங் எடுக்க வந்தவர்கள் பணம் கொடுத்தாக செய்தி வருகிறது.
என்ன கேவலமான விளம்பர அரசியல்

Leave a Response