இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் என்ற படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான படம் தான் ‘தடையறத் தாக்க. இந்தப்படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ‘தடம் படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக தன்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். படத்தை ‘ரேதன்-தி சினிமா பீப்பிள் நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரிக்கிறார். படத்திற்கு அருண்ராஜ் இசையமைக்கிறார்.
சமீபத்தில், இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக தயாரிப்பாளர் இந்தர் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.