அருண்விஜய்க்கு கொடுத்த வாக்கை கௌதம் மேனன் காப்பாற்றுவாரா..?


அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய படம் ‘என்னை அறிந்தால்’. இந்தப் படத்தில் அருண்விஜய் வில்லனாக நடித்தார். தற்போது அருண்விஜய் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘தடம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பிரபாஸின் ‘சாஹோ’ படத்தில் நடிக்கவுள்ளார்..

அத்துடன் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கலாம் என்கிறார்கள். என்னை அறிந்தால் படத்தின் வெற்றிச்சந்திப்பில் கலந்துகொண்ட கௌதம் மேனன் காலம் வரும்போது அருண்விஜய்யை ஹீரோவாக வைத்து படம் இயக்குவேன் என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்‘ படத்தையும், தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தையும் ஒரே நேரத்தில் இரு படங்களையும் இயக்கி வருகிறார். இதில், ‘துருவ நட்சத்திரம்‘ முடியும் தருவாயில் இருக்கிறது. இந்தப்படங்களை முடித்துவிட்டு பின்னர் அருண்விஜய் படத்தை இயக்குவார் என தெரிகிறது.

Leave a Response