நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக இணைந்துள்ளது. பெயர் சூட்டப்படாத சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து கொல்கத்தாவில் 30 நாட்கள் நடைபெறவுள்ளது.
இப்படத்தில், முன்னதாக கீர்த்தி சுரேஷ் இணைந்தார். இவர்கள் இருவரும் நடித்த பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
இப்படத்தில் புதிதாக கதாநாயகி ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ‘வனமகன்’ படத்தில் நடித்த சாயிஷா. இவர் நடிப்பு, நடனம் இரண்டிலும் திறமையாக செயல்பட்டு வருகிறார். முக்கிய வேடத்தில் சாயிஷா நடித்து வருவதாக கூறப்படுகிறது.