முதன்முறையாக டபுள் ஆக்சன் ரோலில் நடிக்கும் அருண்விஜய்..!


இளம் நடிகர்களில் விஜய், அஜீத்தில் தொடங்கி, ஜெயம் ரவி, ஜீவா, சிம்பு வரை, அது வெற்றியோ தோல்வியோ தங்களது டபுள் ஆக்சன் ரோல் கனவை நனவாகி விட்டார்கள்.. ஆனால் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக திரையுலகில் வலம்வரும் அருண்விஜய் தற்போதுதான் முதன்முறையாக டபுள் ஆக்சன் ரோலில் நடிக்க இருக்கிறார்.

தற்போது மகிழ்திருமேனி டைரக்சனில் அவர் நடித்துவரும் ‘தடம்’ படத்தில் தான் கவின், எழில் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறாராம். உண்மை சம்பவத்தை அடிபடையாக கொண்டு உருவாகிவரும் இந்தப்படத்தில் இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பில் நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறாராம் அருண்விஜய்

Leave a Response