சுந்தர்.சி டைரக்சனில் நடிக்கிறார் ஓவியா..?


பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடிகை ஓவியாவுக்கு ஏகப்பட்ட மவுசு கூடியுள்ளது. இந்நிலையில் நடிகை ஓவியாவை வைத்து ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில், 2012ல் வெளியான படம் ‘கலகலப்பு’. இந்தப் படத்தில் விமல், ‘மிர்ச்சி’ சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் காமெடியாக இருந்ததால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது சுந்தர்.சி, ‘சங்கமித்ரா’ படத்தின் பணிகளில் தீவிரமாக இருக்கிறார். ஹீரோயின் அமையாததால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே போகிறது. இந்நிலையில் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. அந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட்டையும் அவர் எழுதி முடித்துவிட்டாராம். அதில் தான் ஓவியா நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response