அமைச்சரவையில் சேருகிறது பாமக?

தமிழகத்​தில் தவெக தலை​மை​யில் உரு​வாக்​கப்​பட்ட மதச்​சார்​பற்ற சமூகநீதி வெற்​றிக் கூட்​ட​ணி​யில் காங்​கிரசு, விசிக, ஐயுஎம்எல், மதி​முக ஆகிய கட்சிகள் இணைந்​தன.

பொதுவுடைமைக் கட்​சிகள் கூட்டணியில் இணை​யாமல் வெளி​யில் இருந்து ஆதரவு அளிப்பதாக
அறி​வித்​தன.ஆட்சிக்கு ஆதரவு கொடுத்திருந்தாலும்,அரசின் செயல்பாடுகளையொட்டி தவெக அரசை விமர்​சனம் செய்து வரும் பொதுவுடைமைக் கட்​சிகள், மதுராந்தகம், தாராபுரம் இடைத்​தேர்​தல் பரப்புரையின்​போது, தவெக மீது கடும் விமர்​சனங்​களை வைத்​தன.இதனால்,பொதுவுடைமைக் கட்சி​கள் ஆதரவை திரும்பப் பெற்றுவிடும் என்கிற அச்சத்தில் விஜய் அரசு இருக்கிறதென்கிறார்கள்.

இதற்​கிடையே,பொதுவுடைமைக் கட்சிகளின் 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக, 4 சமஉக்​கள் வைத்​துள்ள பாமகவை, தவெக கூட்​ட​ணி​யில் சேர்த்​துக் கொள்ள முதல்​வர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்​கான நகர்​வு​கள் நடந்து வரு​வ​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

அதே​நேரம், தவெக அமைச்சர்​களில் சிலரது செயல்​பாடு​கள் திருப்​தி​யாக இல்லாததால், மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்​தேர்​தல் முடிவு​கள் வெளி​யான பிறகு அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்யவும் முதல்​வர் திட்​ட​மிட்​டுள்​ளதாகச் சொல்லப்படுகிறது.

கூட்​ட​ணி​யில் பாமக இணை​யும்போது, அக்​கட்​சி​யின் சட்​டப்​பேர​வைக் குழுத் தலை​வர் சவுமியா அன்​புமணியை அமைச்​சர​வை​யில் சேர்க்கிறோம் என்று விஜய் தரப்பில் உறுதிமொழி கொடுக்கப்பட்டிருப்பதாகவும்,விரைவில் அது நடக்கும் என்றும் சொல்கின்றனர்.

Leave a Response