தம்பிராமையாவின் மகனுக்கு விஜய் பாராட்டு..!


நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி தற்போது இன்பசேகரன் என்பவர் இயக்கத்தில் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். படம் வெளியாகும் நிலையில் உள்ளது. படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஓப்பனிங் பாடல் ஒன்று வருகிறதாம். அதில் மிகச்சிறப்பாக உமாபதி நடனமாடியிருக்கிறாராம்.

அந்த பாடலை வீடியோவை நடிகர்கள் விஜய், அஜீத், விஜய்சேதுபதி ஆகியோரிடம் போட்டுக்காட்டியுள்ளார். அதில், உமாபதியின் நடனத்தைப்பார்த்து, மூன்று பேருமே பாராட்டினார்களாம். அதில் நடிகர் விஜய், படத்தில் தம்பி உமாபதி ரொம்ப பிரமாதமாக ஆடியிருக்கிறார் என்று தனது வியப்பை பெரிய அளவில் வெளிப்படுத்தினாராம்.

அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் ‘ஏனடி’ என்று தொடங்கும் ஒரு டூயட் பாடலின் மேக்கிங் வீடியோ யு-டியூப்பில் வெளியாகி இதுவரை சுமார் 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Leave a Response