
நடிகர் அரவிந்தசாமி மணிரத்னத்தின் ‘கடல்’மூலம் ரீ-என்ட்ரியானார். தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’ படத்தில் நடித்து மீண்டும் தன்னை ஒரு ஹீரோ லெவலுக்கு உயர்த்திக் கொண்டார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படம் அரவிந்தசாமியை மீண்டும் சினிமாவில் பிஸியாக்கியுள்ளது. தற்போது மீண்டும் ஜெயம் ரவியுடன் ‘போகன்’படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
போகனை தொடர்ந்து ‘சதுரங்க வேட்டை-2’ படத்தில் த்ரிஷா ஜோடியாக உள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அரவிந்தசாமி. இந்தப் படத்தை இயக்குநர் செல்வா இயக்கவுள்ளார். நடிகர் அரவிந்த்சாமி ஏற்கெனவே செல்வா இயக்கத்தில் ‘புதையல்’என்ற படத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணையவுள்ளார்கள். புதியபடத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.


