
முன்னணி ஹீரோவாக வேகமாக வளர்ந்து வந்த பரத்துக்கு, சமீபத்திய பல படங்கள் தோல்வியடைந்தன. இதனால் அவரது மார்க்கெட் சரிந்தது. தற்போது நடிகர் பரத் ‘பொட்டு, ‘கடுகு’உள்ளிட்ட ஒரு சில படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் பரத் திடீரென வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார்.
இதில் ஏற்கனவே ஒரு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் நிலையில் இன்னொரு வில்லனாக பரத்தும் இணைந்துள்ளார். தனக்கான ரோல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ரோலாக இருப்பதால் வில்லன் வேடமாக இருந்தபோதிலும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் பரத். ஒருவாரத்திற்கு முன்னர் தன் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சியிலும் பங்கேற்று விட்டு திரும்பியுள்ளார். இப்போது மகேஷ்பாபு படத்திற்காக தனது உடலை தேற்றி வருகிறார்.


