13 வருடம் கழித்து தனுஷின் படத்தில் இணைந்த மன்மதராணி..!


கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன் தனுஷுடன் ‘திருடா திருடி’ படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் தான் சாயாசிங்.. அதன்பின் சில படங்களை கதாநாயகியாக, அக்காவா, ஓரு பாட்டுக்கு நடனம் ஆடுபவராக மாறிய சாயாசிங், சில நாட்கள் தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போனார்.

இப்போது தான் ஜோடியாக நடித்த தனுஷ், இயக்குனராக மாறியுள்ள ‘பவர் பாண்டி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சாயாசிங். “தனுஷ் முதன் முறையாக படத்தை இயக்குவது போன்றே இல்லை. இயக்குனரான தனுஷ் குழந்தை மாதிரி உற்சாகமாக செயல்படுகிறார். அவருடன் திருடா திருடி படத்தில் மன்மத ராசா பாடலுக்கு ஆட்டம் போட்டது மறக்க முடியாது.ஒரு இயக்குனராக நடிகர்களிடம் இருந்து தனக்கு என்ன வேண்டும் என்பதை தனுஷுக்கு நன்றாகவவே தெரியும்” என சாயாசிங் கூறியுள்ளார்.

Leave a Response