
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடுவதை தவிர்த்து விட்டார்.. ஆனால் ரசிகர்கள் கேட்டால் தானே.. அந்தவிதமாக ரஜினிகாந்தின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகன் என்ற முறையில் பாடலாசிரியர் மதன் கார்கி இளம் இசையமைப்பாளருடன் இணைந்து பிறந்தநாள் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
சேகர் சாய்பரத் என்பவற்றின் இசையில், ‘கெட்ட பையன் சார் இந்த காளி’ எனும் தலைப்பில் பாடல ஒன்றை உருவாக்கி, அதனை இன்று ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே மதன் கார்கி சூப்பர்ஸ்டார் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பாடல் எழுதி உருவாக்கினார். ஆனால், லிங்கா பட சர்ச்சை, சென்னை வெள்ளம் என அடுத்தடுத்து தடங்கள் ஏற்பட்டதால் அந்தப் பாடலை கார்கி வெளியிடவில்லை.


