விவாகரத்து செய்தியை வெளிப்படையாக அறிவித்தார் ரஜினி மகள்..!


கடந்த ஒரு வருடத்தில் கவனித்து பார்த்தோமேயானால் திரையுலகில் அது தமிழாகட்டும் இல்லை, மலையாளம் ஆகட்டும் நட்சத்திர தம்பதிகள் தங்களது திருமண பந்தத்தை முறித்துக்கொள்வது அதிகரித்து வருவதை அறியலாம். அவ்வளவு நீண்ட நாளைக்கு மன் விவாகரத்துக்கு வினப்பைத்து தனது கணவரான மலையாள இயக்குனர் பிரியதர்ஷனுடன் பிரிந்து வாழ்ந்து வந்தார் அவரது மனைவி லட்சுமி.

இன்று காலை தனக்கு முழுமையான விவாகரத்து கிடைத்துவிட்டது என சந்தோஷமாக செய்தியும் வெளியிட்டார். நமக்குத்தான் அதிர்ச்சி.. ஆனால் அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் “நாங்கள் ஒரு வருடமாகவே பிரிந்து வாழ்கிறோம்.. விவகாரத்திற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது” என கூறி இதுநாள் வரை வதந்தியாக பரவிய தகவலை உறுதிப்படுத்தி அடுத்த அதிர்ச்சிக்கு நம்மை ஆளாக்கியுள்ளார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா.

சில நாட்களாகவே மீடியாவில் இந்த விஷயம் புகைந்து வந்தது.. ஆனாலும் இதுபற்றிய உறுதியான செய்திகள் எதுவும் வெளியாகமால் இருந்து வந்தன. இன்னொரு பக்கம் சௌந்தர்யாவுக்கு விலங்குகள் நல தூதராக பதவி கொடுக்கப்பட்டது வேறு இந்த செய்தியுடன் இணைத்தே பேசப்பட்டது. இதுதான் சரியான தருணம் என நினைத்தாரோ என்னவோ, உண்மையை பட்டென போட்டு உடைத்து விட்டார் சௌந்தர்யா.

Leave a Response