தாமிராவின் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஆண் தேவதை’..!


சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்குனர் சிகரம் பாலசந்தர் என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கியாவர் தாமிரா. இப்போது சமுத்திரக்கனியை கதைநாயகனாக வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். படத்திற்கு ஆண் தேவதை என பெயர் வைத்துள்ளார்.

சற்றே இடைவெளிக்குப்பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என்று திறமைசாலிகளுடன் கைகோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு தான் திரைக்களத்துக்கு வந்திருக்கிறார் இயக்குநர் தாமிரா.

அதுமட்டுமல்ல, இயக்குநர் சிகரம் பாலச்சந்தரிடம் கொண்ட அன்பின், மதிப்பின் அடையாளமாக அவரது நினைவாக ‘சிகரம் சினிமாஸ்’ என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்து ஃபக்ருதீனுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார் தாமிரா.

இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட் ஒர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது. இப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதை இந்தப்படம் அலசுகிறது.

Leave a Response