
அருண்விஜய், கார்த்திகா நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த ‘வா டீல்’ ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை இரத்தின சிவா என்பவர் இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்த ‘வா டீல்’ படம் ரிலீசாகாமல் இருந்ததால் கடந்த வருடம் வரை வேறு படம் எதுவும் இயக்காமல் இருந்தார் இரத்தின சிவா.
அதன்பின்னர் திடீர் அதிர்ஷ்டமாக விஜய்சேதுபதி நடிக்கும் ‘றெக்க’ என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பு அவரை தேடிவந்தது. தற்போது அந்தப்படத்தின் முக்கால்வாசி போர்ஷனை இயக்கி முடித்து விட்டார் ரத்தினசிவா. இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கும் சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆயுத பூஜை ரிலீஸாக அக்டோபர் 7ம் தேதி ‘றெக்க’ வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.
ஆக ஒரு அறிமுக இயக்குனருக்கு இரண்டு படங்கள் ஒரு மாத இடைவெளியில் வெளியாவது என்பது மிகப்பெரிய ஜாக்பாட்.. ஆனால் முதலில் வெளியாகும் படத்தின் ரிசல்ட் மோசமாக இருந்து, அடுத்த படத்தின் எதிர்பார்ப்பை கெடுத்துவிடாமல் இருக்கவேண்டும்.. அதுதான் முக்கியம்.


