ஓரெழுத்தை அதிகமாக நம்பும் ஜீவா..!


அது என்னவோ தெரியவில்லை ஒற்றை எழுத்து டைட்டில் வைப்பது ஜீவாவுக்கு செண்டிமெண்டாக வெற்றியையே கொடுத்து வருகிறது.. ‘ஈ’, ‘கோ’ என அவர் நடித்த இரண்டு படங்களுமே வெற்றிப்படங்கள் தான். அந்தவகையில் அடுத்ததாக ‘கீ’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் ஜீவா. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நிக்கி கல்ராணி.

இன்னொரு கதாநாயகியாக நிகா சொட்டியும் காமெடியனாக ஆர்.ஜே.பாலாஜியும் நடிக்கிறார்கள். இப்படத்தை செல்வராகவனின் உதவியாளர் காலீஸ் என்பவர் இயக்க இருக்கிறார். காமெடி மற்றும் டெக்னாலஜி கலந்த படமாக இப்படத்தை உருவாக்க இருக்கிறார்கள். இந்தப்படத்தை ‘நாடோடிகள்’ மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.

Leave a Response