அதர்வாவை ‘பாணா காத்தாடி’ படம் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தற்போது அதர்வாவை வைத்து இயக்கிவரும் படம் ‘செம போத ஆகாத’.. இந்தப்படத்தை அதர்வாவே தயாரித்தும் வருகிறார்.. இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் காவியத்தலைவன் படத்தில் நடித்த அனைகா சோட்டி நடிக்கிறார்.
படத்தில் இவருக்கு செக்ஸ் தொழிலாளர் வேடமாம்.. இந்த கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் தயங்கிய நிலையில் அனைகா தைரியமாக ஒப்புக்கொண்டாராம். அதுமட்டுமல்ல, படத்தில் இவருக்கு ஒன்றரை நிமிட ஐட்டம் சாங் ஒன்றும் இருக்கிறதாம். இது விஜய்யின் குஷி படத்தில் இடம்பெற்ற ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல் மாதிரி கிக் ஏற்றும் என்கிறார்கள்.