அதர்வா படத்தை இயக்குகிறார் ஆர்.கண்ணன்..!


வழக்கமாக ரீமேக் படங்களாக இயக்கிவந்தவர் ஆர்.கண்ணன். அதனால் அவர் இயக்கத்தில் வெளியாகும் படங்களை எப்போதும்போல பார்த்துவந்த ரசிகர்களுக்கு சில மாதங்களுக்கு முன் அவரது இயக்கத்தில் வெளியான இவன் தந்திரன்’ படம் நிச்சயம் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கும்.

ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இன்று சினிமாவில் உள்ள இளம் நடிகர்களையும் ஆர்.கண்ணன் பக்கம் திரும்பவைத்தது அந்தப்படம்.. காரணம் டெக்னாலஜியை மிகச்சரியாக பயன்படுத்தி விறுவிறுப்பாக, அதேசமயம் வலிந்து திணிக்கப்படும் எந்த ஒரு காட்சியும் இல்லாமல் மிக நேர்த்தியாக அந்தப்படத்தை இயக்கியிருந்தார் ஆர்.கண்ணன்..

இதோ அடுத்ததாக இளம் நாயகன் அதர்வாவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் ஆர்.கண்ணன்.. இந்தப்படத்தின் கதைக்கு அதர்வா தான் பொருந்துவார் என உறுதியாக கூறும் ஆர்.கண்ணன் இந்தப்படத்தை ஜனவரியில் துவக்கி கோடைவிடுமுறையில் ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம்.

Leave a Response