
காதல், நட்பு, பழிவாங்கல் என சினிமாவின் எவர்கிரீன் கான்செப்ட்டில் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.. மற்ற படங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசம் காட்டினாலே இவை எடுபடும் சாத்தியம் இருக்கிறது. ஆனால் விளையாட்டை மையமாக கொண்ட படங்கள் என்றால் அதன் சினிமா எல்லை ரொம்பவும் குறுகியது..
உதாரணத்திற்கு கபடி போட்டியை மையமாக வைத்து ‘கில்லி’, மற்றும் ‘வெண்ணிலா கபடி குழு’ என் இரண்டு படங்கள் ஹிட்டடித்துள்ளன. இரண்டிலும் கிளைமாக்ஸில் கபடி போட்டியில் ஹீரோ ஜெயிப்பதுதான் பிரதானம். இருந்தாலும் இரண்டு படங்களும் வெவ்வேறு கதை பின்னணியை கொண்டவை.
கில்லி’ படம் பக்கா ஆக்சன் மோட்.. ஆனால் வெண்ணிலா கபடி குழு வெகு அமைதியான கபடி விளையாட்டை மட்டுமே மையபடுத்திய படம். இனி இன்னொரு படம் கபடியை வைத்து வெளியாவதாக அறிவித்தால் இனி என்னடா இதுல புதுசா சொல்லப்போறாங்கன்னு தானே தோன்றும்.?
அப்படித்தான் பாக்ஸிங்கை மையப்படுத்தி வரும் படங்களும். நமக்கு தெரிந்து பாக்ஸிங்கில் வெளியான தமிழ்ப்படங்கள் வெகு சில தான். அதில் ஹிட் அடித்தவை என்றால் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, இறுதிச்சுற்று, பூலோகம் என சிலவும் ஹிட் அடிக்காவிட்டாலும் பிரபலமானவை என்கிற வகையில் விஜயகாந்த் நடித்த ‘பரதன்’, விஜய் நடித்த பத்ரி போன்ற சில படங்கள் மட்டுமே அடங்கும்.
இதில் இறுதிச்சுற்று மட்டும் பூலோகம் படங்கள் குறிந்த கால இடைவெளியில் வெளியானாலும் கூட பாக்சிங்கை இரண்டும் வெவ்வேறு கோணத்தில் கையாண்டு இருந்ததால் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இரண்டிலும் அடிக்கடி பாக்ஸிங் காட்சிகள் வந்தன. கதையின் நாயகன் அல்லது நாயகி இருவருமே எதிராளியை வீழ்த்துவதற்காக நாம் ரசிகர்கள் நகம் கடித்து காத்திருந்தனர்தான்.
ஆனால் இரண்டின் கதைப்பின்னணியும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஆனால் இனி ஒரு படம் பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவானால் இவற்றில் இருந்து அவை எப்படி வித்தியாசப்பட்டு நிற்கப்போகின்றதோ தெரியவில்லை..
‘கபாலி’யை தொடர்ந்து பா.ரஞ்சித் வடசென்னை கதைக்களத்தில் சூர்யாவை வைத்து இயக்கும் படம் பாக்ஸிங்கை மையமாக கொண்டது என சொல்லப்படுகிறது.. வட சென்னை பாக்ஸர் என்றதுமே உடனே ஞாபகத்து வந்துபோவது ஜெயம் ரவியின் பூலோகம் தான். இதைத்தாண்டி ரஞ்சித்தும் சூர்யாவும் ஏதாவது புதிதாக சொன்னால் தான் ரசிகர்களிடம் எடுபடும். செய்வார்கள் என நம்புவோம்..


