வாய் கிழியப் பேசும் சிங்கள அரசு இதற்கென்ன பதில் சொல்லும்?

2009 இறுதிப்போருக்குப் பிறகு தமிழ்மக்கள் சுபிட்சமாக வாழ்வதாக உலகுங்கும் சுற்றிச் சுற்றிப் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏதிலிகள் முகாம் இருப்பதை நியாயப்படுத்த சட்டங்கள் இருக்கலாம். போர் முடிந்து ஐந்தாண்டுகளாகியும் ஈழத்திலும் அகதிகள் முகாம்கள் இருப்பதை எந்த வகையில் சேர்த்தி.

அங்கிருந்து வந்திருக்கும் பதற வைக்கும் செய்தி….

மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் யுத்தம் முடிந்த இந்நிலையிலும் தொடர்ந்தும் அகதி முகாம்களில் தங்கவைக்கப்படிருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே. 1992 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த இம் மக்கள் கடந்த 22 வருடங்களாக சொந்த இடத்தை விட்டுப் பிரிந்து பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இன் நிலையில் தங்கள் சொந்த மண்ணில் தங்களை வாழவிடுங்கள் என்று பல்வேறு பட்ட போராட்டங்களில் இவர்கள் ஈடுபட்டிருந்தாலும் அது பிரயோசனமற்ற போராட்டங்களாகவே இருந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது மயிலியிட்டி பிரதேசத்தை பூர்வீகமக கொண்ட ஒரு பகுதியினர் வாழும் கந்தரோடை ஆலடி அகதி முகாம்களில் வெள்ளம் வீட்டுக்குள் புகுந்துள்ளது. சுன்னாகம் சபாபதிபிள்ளை அகதி முகாம் மக்களின் நிலையும் மல்லாகம் அகதி முகாம்களின் நிலையம் இது தான்

சொந்த இடத்திலும் வாழ முடியாமல், தஞ்சம் புகுந்த இடத்திலும் வெள்ளம் வீடுக்குள் புகுந்த நிலையில் தவிக்கும் இம்மக்களின் பரிதாப நிலையை போக்க. தற்காலிக முகாம்களை சீர்ப்படுத்துவதை காட்டிலும் சொந்த இடங்களை இவர்களுக்கே வழங்குவது சிறந்த தேர்வாக அமையலாம். மீன்பிடி தொழிலில் இலங்கையிலேயே அதிகளவு இலாபமீடும் பிரதேசமாக ஒருகாலத்தில் மயிலிட்டி துறைமுகம் விளங்கியது அனைவரும் அறிந்ததே . ஆனால் தற்ப்போது அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களின் பிள்ளைகள் மீன்பிடி தொழிலையே மறக்கும் நிலையிலேயே இருகின்றார்கள். ஏன் 1992களின் பின்னர் பிறந்த பிள்ளைகள் தற்போது 22 வயதை அடைந்த நிலையில் சொந்த இடம்பற்றியும் சொந்த தொழில் பற்றியும் கனவுகளில் மடுமே காண்கின்றார்கள்

யுத்தம் முடிந்த நிலையில் வீதிகளை புணரமைக்கும் இந்த அரசாங்கம் இந்த மக்களின் விதியை இப்படி தடம்புரள வைப்பது ஏன்?-யாழ்ப்பாணத்தான்.

Leave a Response