
நடிகர் விஜய் தங்களுக்குப் பரப்புரை செய்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்த அக்கட்சியினர் விஜய்யின் வெட்டுருவை வைத்து தேர்தல் பரப்புரை செய்துவருகின்றனர்.
அதுகுறித்து இயக்குநர் சேரன் கூறியிருப்பதாவது….
ஒரு தலைவர் சந்திக்கும் முதல் தேர்தல்.இந்த பரப்புரை நிலை சரிதானா? இந்நேரம் அந்தத் தலைவர் அனைத்துத் தொகுதிகளையும் பம்பரமாகச் சுற்றியிருக்க வேண்டாமா? அதைவிடுத்து திருவிழாவில் போட்டோ எடுக்க நடிகர்கள் கட்அவுட் வைத்திருப்பது போல் விஜய்யின் டூப் வேனில் வருவது எவ்வளவு பெரிய அவமானம் அந்தத் தலைமைக்கு? நாளை சட்டசபைக்குள் இப்படி எத்தனை பேர் அமரப் போகிறார்கள் தினமும்.
நான்கு தேர்தல்களைச் சந்தித்து தொடர் தோல்வியைச் சந்தித்த போதும் தளராமல் ஒரு மனிதன் தன் கொள்கைக்காக, கட்சிக்காக, மக்கள் மாறுவார்கள் என நம்பிக்கை வைத்து,கொட்டும் மழையிலும் நிறுத்தாமல் பிரச்சாரம் செய்கிறார்.அந்தத் தலைவன் எங்கே? முதல் தேர்தலிலேயே தனக்குப் பதிலாக டூப்பை பயன்படுத்த அனுமதி தரும் தலைமை எங்கே?
சிந்தியுங்கள் மக்களே.நீங்கள் யார் வேண்டுமா? வேண்டாமா? எனக்கேட்ட ஐயா ஸ்டாலின் அவர்களே இந்த வயதில் இறங்கி நடந்து பிரச்சாரம் செய்கிறார்.ஆனால் நீங்கள் ஒருமணி நேரம்தான் அனுமதி என காரணம் சொல்லி பிரச்சாரத்தை ரத்து செய்கிறீர்கள்.
இப்போ சொல்லுங்க மக்களே. நிஜப்போட்டி திமுக Vs நாதக தானே?
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


