மாநிலக் கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் வெற்றி – இது பீகார் மாதிரி

பீகார் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெறுகிறது.

அந்த ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன.

பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் எதிர்க்கட்சிகளுக்குத் தலைமை வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 143 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு 108 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

அவற்றில், காங்கிரசு 61, விஐபி 15, சிபிஐ (எம்எல்) 20, சிபிஐ 9, சிபிஎம் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. கடந்த 2020 தேர்தலை விடக் காங்கிரசு 9 தொகுதிகளைக் குறைவாகப் பெற்றுக் கொண்டிருக்கிறது.அதேபோல, சிபிஐ 3 தொகுதிகளையும், சிபிஎம் 2 தொகுதிகளையும் குறைவாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

கடந்த தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக முன்னணியுடன் (என்டிஏ) 11 தொகுதிகளில் போட்டியிட்ட விஐபி கட்சி,இந்தக் கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளது.அந்தக் கட்சி,இந்தக் கூட்டணியில் 15 தொகுதிகளைப் பெற்றுள்ளது. ஆர்ஜேடி கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளது.அதற்காக காங்கிரசு உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தமக்கான இடங்களை விட்டுக் கொடுத்துள்ளன.

எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.கடந்த தேர்தலை விட கூட்டணி பலம் அதிகரித்துள்ளது.மாநிலக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒன்றிய அளவிலான கட்சிகள் பெரிதும் விட்டுக் கொடுத்துள்ளன.

அதேநேரம், ஆளும்கட்சிக் கூட்டணியில் மாநிலக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் ஒன்றிய கட்சியான பாஜகவும் சம அளவு (ஆளுக்கு 101) தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ்குமார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க மறுத்திருக்கிறார்கள்.

இந்தக் காரணங்களால் கடந்த முறை மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்ட எதிர்க்கட்சிக் கூட்டணி இம்முறை கட்டாயம் வெற்றி பெறும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response