தமிழ் வழக்காடு மொழி – எட்டாவது நாளில் போராட்டம் முடித்து வைப்பு

தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு என்ற கோரிக்கையை முன் வைத்து பிப்ரவரி 28 ஆம் நாள் முதல் வழக்குரைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சனநாயகர்கள் உட்பட 24 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்திருந்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுத்தோர் பட்டியல்:

1.வழக்குரைஞர். புகழ்வேந்தன்,
2.புளியந்தோப்பு மோகன்,
3.வழக்குரைஞர். சங்கர்,
4.மருது மக்கள் அதிகாரம்,
5.வழக்குரைஞர். வேல்முருகன்,
6.வழக்குரைஞர். அருண்குமார்,
7.வழக்குரைஞர். திசையிந்திரன்,
8.காளிதாசன்
தாய்த் தமிழ்ப் பள்ளி அம்பத்தூர்,
9.பாவலர் கீர்த்தி,
10.வழக்குரைஞர். செல்வகுமார்,
11.வழக்குரைஞர். தெய்வம்மாள்,
12.வழக்குரைஞர். பாரதி,
13. நிறைமதி
சட்டக்கல்லூரி மாணவி,
14.வழக்குரைஞர். பகத்சிங்,
15. சின்னப்ப தமிழர்,
16. குருசாமி,
17. வணங்காமுடி
சட்டக்கல்லூரி மாணவர்,
18. தொல்காப்பியன்,
19.வழக்குரைஞர். கலைச்செல்வன்,
20.வழக்குரைஞர். யாசர் கான்,
21.வழக்குரைஞர். மெய்யப்பன்,
22.வழக்குரைஞர். ரமேசு,
23. தமிழ்ப்பித்தன், தபெதிக,
24. வளர்மதி
பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்,
சட்டக்கல்லூரி மாணவி.

இப்போராட்டம் தொடங்கிய நாள் முதல் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் இவர்களுக்கு ஆதரவாக அடையாளப் போராட்டங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன.

மார்ச் 6 அன்று இப்போராட்டம் தொடங்கிய எட்டாம்நாள். எட்டாம்நாளில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேரில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் இரகுபதி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

எனவே, மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என அமைச்சர் வாக்குறுதியளித்தார்.

இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.

தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் இரகுபதி, இந்திய பொதுவுடைமைக் கட்சி மார்க்சிஸ்ட் தமிழ்நாடு செயலாளர் பாலகிருஷ்ணன், நீதியரசர்.அரிபரந்தாமன்,சுபவீரபாண்டியன் ஆகியோர் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்கள்.

Leave a Response