பாராட்டு மழையில் முகமது சமி

ஒருநாள் மட்டைப்பந்துப் போட்டியின் உலகக் கோப்பை தொடர் தற்போது நடந்துவருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய இலங்கை அணிகள் விளையாடின. ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் மட்டை பிடித்தது இந்திய அணி.

அணித்தலைவர் ரோகித் சர்மா 4, சுப்மன்கில் 92,விராட்கோலி 88,ஸ்ரேயாஸ் ஐயர் 82,ரவீந்திர ஜடேஜா 35, முகமது சமி 2, ஜஸ்பிரீத் பும்ரா 1 ஓட்டங்கள் எடுத்தனர்.மொத்தம் 357 ஓட்டங்கள் எடுத்தனர்.

358 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி,19.4 ஓவர்களில் 55 ஓட்டங்களில் அனைத்து வீரர்களையும் இழந்து வெளியேறியது.

இதனால் இந்திய அணி அபாரவெற்றி பெற்று முதல் அணியாக அரைஇறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இந்த வெற்றிக்கு இந்திய அணி சார்பில் முகமது சமி 5 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். மொகமது சிராஜ் 7 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 16 ரன்களை வழங்கி 3 விக்கெட்களை கைப்பற்றினார். ஜஸ்பிரீத் பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதனால் முகமது சமிக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

அவர், ஒவ்வொரு ஆட்டத்திலும் மிளிர்கிறார், எதிரணியை மிரட்டுகிறார்.

கடந்த வருடத்தில் கடுமையான நெருக்கடியைத் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்தார், உடல் நிலை சரியில்லாத மகளைச் சந்திக்கக் கூட முடியவில்லை.

பாஜகவினரின் வசையை எதிர்கொண்டார்,

4 ஆட்டங்களுக்கு “டிராப்” செய்யப்பட்டார். அணியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்ட அவர், வார்த்தைகள் மூலமாக அல்லாமல் தன்னுடைய பந்துவீச்சின் மூலம் பதில் சொன்னார்.

இதில் ஒரு ஆச்சரியம், இதுவரை இந்த தொடரில் அவர் எடுத்துள்ள விக்கெட்டில் ஒன்றுகூட எல்பிடப்ளியூ கிடையாது. இந்தியப் பந்துவீச்சு உலகின் “விராட் கோலியாக” பரிமணித்துள்ளார் சமி

இவ்வாறு உட்பட பல வகைகளிலும் அவரைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

Leave a Response