மீண்டும் அதிமுக பொதுக்குழு இம்முறை நடத்துவது ஓபிஎஸ் – எடப்பாடி அதிர்ச்சி

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழக உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்று சொல்லி எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகப் பதவி ஏற்றுள்ளார். அவருக்குப் போட்டியாளராக திகழ்ந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

ஆனால் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவை இந்தச் சிக்கல்களில் இன்னமும் எந்தத் தீர்ப்பும் வழங்கவில்லை. இதனால் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நடவடிக்கை எடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒடுக்குவதற்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளனர்.ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் 90 விழுக்காடு உறுப்பினர்கள் பங்கேற்றுக் கையெழுத்துப் போட்டிருக்கும் படிவங்களையும் கொடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், எடப்பாடி அணியினர் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தியது போன்று, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியினரும் போட்டிப் பொதுக்குழுவை நடத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கான அறிவிப்பை விரைவில் ஓபிஎஸ் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. அந்தக் கூட்டத்தை சென்னையில் நடத்தலாமா அல்லது வேறு இடத்தில் நடத்தலாமா என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு பொதுக்குழு உறுப்பினர்களில் இப்போது சுமார் 300 பேர் வரை ஆதரவாளர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

அதிமுகவில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 2,600 பேருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பவது என்றும் கூட்டம் நடத்துவதற்கு முன் மேலும் பல பொதுக்குழு நிர்வாகிகளை இழுக்க ஓபிஎஸ் அணியினர் காய் நகர்த்தி வருவதாகவும் சொல்கிறார்கள்.

இப்போது எடப்பாடி அணியில் கட்சிப்பதவிகள் ஒதுக்கி வெளிவந்த அறிக்கைகளால் ஏராளமானோர் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து பொதுக்குழுவை நடத்த ஓபிஎஸ் அணி திட்டமிடுகிறதாம். இதனால் எடப்பாடி தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.

Leave a Response