இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு – மோடியைச் சபிக்கும் மக்கள்

பெட்ரோல், டீசல் விலை மார்ச் மாதம் 22 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 110 ரூபாய் 9 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 18 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்தது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்தது. டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 16 நாட்களில் இதுவரை பெட்ரோல் விலை 9.56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.அதைப்பற்றிக் கொஞ்சமும் கவனிக்காமல் தொடர்ந்து விலையை உயர்த்திவரும் மோடியை மக்கள் சபித்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Response